கொரிய பாப் பாடகர் ‘சை'யின் கங்னம் ஸ்டைல் நடனம் உலகையே ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நடனம் யு டுயூப்பில் வெளியாகி நூறு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களோ, ரியாலிட்டி ஷோ நாயகர்களோ இதை ஆடாதவர்கள் இல்லை. இந்த ஸ்டைல் நடனத்தை தமன்னா இந்திபடமான ஹிம்மத்வாலா படத்தில் ஆடியிருக்கிறாராம்.
ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா' படம் இந்தியில் மீண்டும் ரீமேக் ஆகிறது. இதை சாஜித் கான் இயக்குகிறார். ஸ்ரீதேவி நடித்த வேடத்தை தமன்னா ஏற்று நடிக்கிறார். ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தமன்னா ஆடும் ஆட்டத்தின்போது கங்னம் ஸ்டைல் நடன அசைவு வைக்கப்பட்டது. இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது"முதலில் குறிப்பிட்ட ஸ்டைலில் நடன அசைவு வைப்பதுபோல் ஐடியா எதுவும் இயக்குனருக்கு இல்லை. திடீரென்று அந்த நடன அசைவு இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். வீடு திரும்பிய நான் அதேபாணியில் உள்ள ஆட்டங்களை வீடியோவில் போட்டுபார்த்து ஆடிப்பார்த்தேன். அது சரியாக வந்தது. மறுநாள் ஷூட்டிங்கில் அந்த ஸ்டைலில் நடனம் ஆடினேன். ‘
‘ஹிம்மத்வாலா' தவிர இந்தியில் வேறு படம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிய தமன்னா, தமிழில் அஜீத் ஜோடியாக ‘சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதுதவிர தெலுங்கில் சில படங்கள் நடிக்கிறேன்."என்றார்
கங்னம் ஸ்டைல் நடனத்தை தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பாடலில் ஆடுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment