மதுரை: மகளின் திருமணத்துக்கு அரசியல் பேதமின்றி அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியல் பிரச்சினைகளால் கடந்த இரண்டாண்டு காலமாக ஒதுங்கியிருந்த வடிவேலு, இப்போது மீண்டும் பரபரப்பாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் மூத்த மகளுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மதுரையில் திருமணம் நடக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளார் வடிவேலு.
மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது.
வடிவேலு இப்போது அரசியல் பற்றி பேசுவதில்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் திமுக தலைவர்களை அழைத்தால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் வரும். எனவே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாராம்.
இப்போது அனைத்து அரசியல் தலைவர்களுக்குமே அழைப்பிதழ் தருவதென முடிவு செய்துள்ளாராம்.
திருமணம் முடிந்த பிறகு புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கப் போகிறாராம் வடிவேலு.
Post a Comment