சன் டிவியின் தென்றல் தொடரில் நடித்து வரும் ஸ்ருதி தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே பெரிய திரையில் நடித்தவர் ஸ்ருதி. அவர் நடித்த படங்கள் ஹிட் ஆகவில்லை. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் போனது.
இந்த சூழ்நிலையில்தான் சீரியல் வாய்ப்பு கதவை தட்டவே தென்றல் தொடரில் நடித்தார். இதில் நடித்த பின்னர் ஸ்ருதி என்பதை விட துளசி என்றுதான் பெரும்பாலான மக்களுக்கு அடையாளம் தெரிகிறது.
இந்த புகழைக் கருத்தில் கொண்டு மீண்டும் சினிமா வாய்ப்புகள் கதவை தட்டினாலும் வருகிற வாய்ப்பை தட்டிக் கழித்து விடுகிறாராம் நாயகி. காரணம் கேட்டால் ஏற்கனவே பெரியதிரையில் ஏற்பட்ட அனுபவம்தான் என்கிறார். தற்போது சின்னத்திரையில் புகழின் உச்சத்தில் இருப்பதே போதும் என்று கூறி புன்னகைக்கிறார் துளசி.
கேரளாவைச் சேர்ந்த துளசி, சீரியலுக்கு வருவதற்கு முன்பு துளசி 1996களிலேயே சினிமாத்துறைக்கு வந்துவிட்டார். இனி எல்லாம் சுகமே, காதல் டாட் காம், ஜெர்ரி, மாண்புமிகு மாணவன், மந்திரன், போன்ற தமிழ் படங்களிலும், சில மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment