ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்பட விருது விழா இன்று மாலை 4.30 ஒளிபரப்பாகிறது.
திரைப்பட விழாக்கள் கொண்டாட்டமானவை, கலர்புல்லானவை... நட்சத்திரப்பட்டாளங்கள் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சிக்கு தனி மவுசுதான்.
தொலைக்காட்சி வரலாற்றில் 20 வருடங்களை கடந்துள்ள ஜீ தொலைக்காட்சி நிறுவனம், இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு நிறைவு விழாவையட்டி ஜீ விருது வழங்கும் நிகழ்ச்சியை மும்பையில் நடத்தியது. இதில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா உள்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்று விருதுகளை அள்ளிச் சென்றனர்.
இந்த விருது நிகழ்ச்சியை அபிசேக் பச்சன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் உண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
Post a Comment