மோகன் பாபு தந்தை மரணம்: துக்கம் விசாரிக்க திருப்பதி சென்ற ரஜினி

|

Rajini Consoles Mohan Babu

திருப்பதி: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் தந்தை காலமானார். இதையடுத்து துக்கம் விசாரிக்க ரஜினிகாந்த் திருப்பதி சென்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நெருங்கிய நண்பர்கள். மோகன் பாபுவின் தந்தை ஸ்ரீ மஞ்சு நாராயணசாமி நாயுடு கடந்த திங்கட்கிழமை தனது 95வது வயதில் திருப்பதியில் காலமானார். இதையடுத்து ரஜினிகாந்த் நேற்று காலை திருப்பதி சென்று அங்குள்ள வித்யா நிகேத்தன் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் இருக்கும் மோகன் பாபு வீட்டுக்கு சென்றார்.

அங்கு தனது நண்பரை சந்தித்த ரஜினி அவரின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்தார். தனது நண்பருக்கு அவர் ஆறுதல் கூறினார். ரஜினி போன்று பல திரையுலக பிரபலங்களும் நேற்று மோகன் பாபுவை சந்தித்து ஆறுதல் கூறினர்.

 

Post a Comment