பாடகர் சிம்புவுக்கு சம்பளம் அஞ்சு லட்சமாம்!!

|

Simbu Fixes Rs 5 Lakh Per Song

சிம்பு முழுநேர பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளதாக, அவரே பிரஸ் ரிலீஸெல்லாம் அனுப்பியுள்ளார்.

ஆம்.. நடிக்க வந்ததிலிருந்து பார்ட் டைமாக அல்லது நட்புக்காக பாடிக் கொண்டிருந்தார் சிம்பு.

‘போட்டு தாக்கு' , ‘லூசுப் பெண்ணே', ‘யம்மாடி ஆத்தாடி', ‘நலம்தானா', ‘வச்சிக்கவா உன்னை மட்டும்' போன்ற பல பாடல்கள் இவரது குரலில் ஹிட்டாகியுள்ளன.

இப்போது புதுமுக இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் பாட சிம்புவை அழைக்கிறார்களாம். பாட்டுக்கு பாட்டுமாச்சு, பப்ளிசிட்டியையும் சிம்புவே பாத்துப்பார் என்கிற கணக்கில் அவரை அழைக்கிறார்கள்.

இதைப் புரிந்து கொண்ட சிம்பு, சரி பாட வர்றேன்... சம்பளமா ஒரு பாட்டுக்கு ரூ 5 லட்சம் கொடுத்துடுங்க என சம்பளம் நிர்ணயித்திருக்கிறாராம்.

சில தயாரிப்பாளர்கள் அதற்கும் சரி என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

'என்னை நான் முழு நேர பாடகனாக கருதவில்லை. செலவை சமாளிக்கவே பாடுகிறேன்,' என்று இதற்கு விளக்கமும் அளித்துள்ளார் சிம்பு.

 

Post a Comment