நடிகையின் வாய்ப்பைப் பறித்த மீடியேட்டர்!

|

உலக அழகிப் பட்டம் வாங்கினாலும், உள்ளூரில் போணியாக முடியவில்லையே என்ற ஆழந்த வருத்தத்தில் இருந்த ஓமண நடிகைக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு வாய்ப்பு வந்ததாம்.

அப்படியொன்றும் பெரிய புராஜக்ட் என்று அதைச் சொல்ல முடியாது. சாதாரண படம்தான். சரி… எள்ளு இல்லாத குறைக்கு வேப்பங்கொட்டையையாவது அரைப்போம் என்ற நினைப்பில் சில லட்சங்களுக்கு படத்தை ஒப்புக் கொண்டு, பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு கிரீன் பார்க்குக்கே வந்திருக்கிறார் அம்மணி.

அப்போது வந்து சேர்ந்திருக்கிறார் மீடியேட்டர் ஒருவர்.

யம்மா.. உங்க ரேஞ்சே வேற… போயும் போயும் லட்சங்களில் ஒப்புக் கொள்ளலாமா.. முதல் படம் தோத்தாலும்… உனக்கு மவுசு இருக்கு. ஒரு 50 லட்சமாவது கேளு என்று, வடிவேலு சீட்டாட்டம் சொல்லிக் கொடுப்பாரே… அந்த மாதிரி ஓதிவிட… ஓமணாவும் அதை அப்படியே கிளிப்பிள்ளையாய் இயக்குநரிடம் ஒப்பித்திருக்கிறார்.

இயக்குநர் அடுத்த நொடி சொன்னது… ‘கிரீன்பார்க் பில்லையும் நீயே செட்டில் பண்ணிட்டு, பொட்டிய எடுத்துட்டு நடையைக் கட்டும்மா!!’

அடடா… ரூம் போட்டு அழக்கூட முடியாம பண்ணிட்டாங்களே!!

 

Post a Comment