புதுமுகங்களை வைத்து கண்டனம் என்ற தமிழ்ப் படத்தை முதல் முறையாக இயக்குகிறார் பாலிவுட் இயக்குநர் சுப்ரமணிய ஜனார்தன்.
அக்ஷய் குமார் நடித்த ஜக்மி தில், ரிஷி கபூர் - மனீஷா கொய்ராலா நடித்த கன்யாதன் உட்பட நான்கு இந்திப் படங்களை இயக்கியவர் சுப்ரமணிய ஜனார்தன்.
தமிழில் சிக்கி முக்கி, மனிதாக இரு ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். இப்போது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் 'கண்டனம்' திரைப்படத்தைத் தமிழில் தனது முதலாவது படமாக இயக்குகிறார்.
ஹிந்தியில் ராஜு சுப்ரமணியன் என்கிற பெயரில் படங்களை இயக்கியவர் தமிழுக்காக சுப்ரமணியன் ஜனார்தன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
ராதா ராம்தாரி புரொடக்ஷன் - அசோக் கோஸுவாமி & ராம்தாரி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று ஜே ஸ்டுடியோவில் பாடல் பதிவுடன் நடந்தது. படப்பிடிப்பினைப் பிரபல இசையமைப்பாளர் (சங்கர் ) கணேஷ் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.
நிழல்கள் ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகன் - நாயகியாக புதுமுகங்கள் விஷால், கார்த்திக் கட்டாக், சாய் ராகேஷ், கமலி மற்றும் ஜிடா மரியா ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
இளமையும் புதுமையுமாக உருவாகவிருக்கும் 'கண்டனம்' படத்திற்கு பி.ஆர்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய் பிரகாஷ் இசையமைக்கிறார்.
Post a Comment