எம்.எஸ். சுப்புலக்ஷ்மியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா

|

Aishwarya S Loss Vidya Balan S Gain

மும்பை: கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியாக நடிக்க ஐஸ்வர்யா மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் அந்த வாய்ப்பு வித்யா பாலனுக்கு சென்றுள்ளது.

ஐஸ்வர்யா கர்ப்பமானதில் இருந்து படத்தில் நடிக்கவில்லை. தற்போது குழந்தைக்கு ஒரு வயதாகியும் இன்னும் அவர் ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. ஐஸ் கதை கேட்கிறார் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்ற செய்தி மட்டும் அடிக்கடி வருகிறது. ஆனால் அவர் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் ராஜீவ் மேனன் தான் கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கும் படத்தில் எம்.எஸ்ஸாக நடிக்க முதலில் ஐஸ்வர்யாவிடம் தான் கேட்டாராம். ஆனால் ஐஸ் ராஜீவ் மேனனுக்கு பதிலே அளிக்கவில்லை. இதையடுத்து தான் அந்த வாய்ப்பு வித்யா பாலனுக்கு சென்றுள்ளது.

தி டர்ட்டி பிக்சரில் சில்க்காக படுகவர்ச்சியாக நடித்த வித்யாவா பாரத ரத்னா எம்.எஸ்ஸாக நடிப்பது என்று பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment