ரொம்ப நாளைக்கு முன் இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் வந்தது நினைவிருக்கலாம். பாலகுமாரன் தன் சினிமா அனுபவங்களை அதில் எழுதியிருந்தார்.
இப்போது அந்தக் கட்டுரைத் தலைப்பை மட்டும் கடன் வாங்கி புதிதாக ஒரு படத்தை உருவாக்குகிறார்கள். இதில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் சேதுபதி. சுமார் மூஞ்சி குமார் என்பது அவர் பாத்திரத்தின் பெயர்!!
ஜீவாவை வைத்து ரௌத்திரம் என்ற சீரியஸ் படத்தை எடுத்த கோகுல், 'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' படத்தை முழுநீள நகைச்சுவையாக உருவாக்குகிறார். நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையே காட்சிப்படுத்தவிருக்கிறாராம்!
சுப்பிரமணியபுரம் சுவாதி, அட்டகத்தி நந்திதா நாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் பரோட்டா சூரி நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு வசனகர்த்தா... பாடலாசிரியர் மதன் கார்க்கி. இசை சித்தார்த் விபின்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தைத் தயாரித்த விஎஸ் ராஜ்குமார்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
Post a Comment