கடல் பட நஷ்டம்... மணிரத்னம் வீட்டை முற்றுகையிடும் விநியோகஸ்தர்கள்!

|

Kadal Loss Distributors Seige Manirathnam House

சென்னை: கடல் படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்காக அவர்கள் மணிரத்னம் அலுலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிரத்னம் தயாரித்து இயக்கிய கடல் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் முதல் நாளே பெரும் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் குறித்து மணிரத்னம் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்திருந்ததால், பெரும் விலை கொடுத்து படத்தை வாங்கினர் விநியோகஸ்தர்கள்.

ஆனால் படம் தோல்வியைத் தழுவியதால் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர். கடல் படம் பல அரங்குகளில் ஒரே வாரத்தில் தூக்கப்பட்டுவிட்டது.

தங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தை மணிரத்னம் திருப்பித் தர வேண்டும் என்று கோரி, அவரது வீட்டை முற்றுகையிடப் போவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்தனர். இதனால் அவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் விநியோகஸ்தர்கள். அலுவலகத்தில் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.

 

Post a Comment