மலேசியாவில் விஸ்வரூபம் படத்துக்கு தடை நீக்கம்

|

Malaysia Lifts Ban On Viswaroopam   

கோலாலம்பூர்: விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று மலேசிய அரசு நீக்குவதாக அறிவித்தது.

இன்றுமுதல் அங்கு விஸ்வரூபம் மீண்டும் அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 25-ம் தேதி இங்கு கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் வெளியானது. இந்தப் படம் சில காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், இஸ்லாமிய அமைப்புகளின் தீவிர எதிர்ப்பு காரணமாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

காரணம், அப்போதுதான் தமிழக அரசு, விஸ்வரூபத்தை இருவாரங்களுக்கு தடை செய்திருந்தது.

பல வழக்குகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்தப் படத்துக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் மலேசியாவில் மட்டும் தடை தொடர்ந்தது. தமிழகத்தில் தடை நீக்கப்பட்டதைக் காட்டி, மலேசியாவிலும் நீக்க வேண்டுமென கமல் தரப்பில் கேட்டிருந்தனர். படத்தின் மலேசிய விநியோகஸ்தர்களும் தங்களுக்கு ஏற்படவிருக்கும் நஷ்டத்தைக் காட்டி கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இன்று படத்தின் மீதான தடையை நீக்குவதாக மலேசியா அறிவித்ததால், அந்நாட்டில் பல அரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது.

 

Post a Comment