சென்னை: விஜய் நடித்த துப்பாக்கி படம் ரிலீஸாகி நாளையுடன் 100 நாட்கள் ஆகவிருக்கிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்த படம் துப்பாக்கி. இந்த துப்பாக்கி என்ற தலைப்புக்காகவே இப்படம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி ஒரு வழியாக நவம்பர் 13ம் தேதி தமிழகம் எங்கும் ரிலீஸானது. ராணுவ வீரராக விஜய் நடித்த இந்த படம் ஹிட்டானது.
மும்பையில் வசிக்கும் தமிழரான விஜய் ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வந்த நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் என்று அழைக்கப்படும் தீவிரவாதிகளை அழிப்பது தான் கதை. இந்த படத்தில் விஜய் பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பேசப்பட்டது.
வசூலில் துப்பாக்கி ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் படம் ரிலீஸாகி நாளையுடன் 100 நாட்கள் முடிகின்றது. தீபாவளிக்கு வெளியான படங்களில் துப்பாக்கி வசூலை அள்ளிக் குவித்தது.
Post a Comment