சென்னை: கவுதம் மேனன் தனக்கு ரூ 20 கோடி வரை தரவேண்டும் என்று தயாரிப்பாளரும் அவரது முன்னாள் பார்ட்னருமான எல்ரெட் குமார் புகார் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார் எல்ரெட் குமார்.
எல்ரெட் குமாரும் கவுதம் மேனனும் இணைந்து படங்கள் தயாரித்து வந்தனர். ஆனால் கடைசியாக தயாரித்த நான்கு படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக புகார் எழுந்தது.
இதுதவிர இருவருக்கும் கடுமையான கருத்து மோதல் எழுந்ததால், இருவரும் பிரிந்துவிட்டனர். மேலும் இதே நிறுவனத்தில் பார்ட்னராக இருந்த மேலும் இருவரும் பிரிந்து சென்றனர்.
இந்நிலையில், கவுதம் மேனன் தனக்கு ரூ 20 கோடி வரை தரவேண்டும் என்று கேட்டு எல்ரெட் குமார் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் கவுதம். எல்ரெட் குமார் வெளிப்படையான இந்த குற்றச்சாட்டால், கவுதம் மேனனுக்கு புதிய படங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment