சென்னை: 2013ம் ஆண்டு தனக்கு சிறந்த வருடமாக அமைந்துள்ளதாகவும், செய்யும் தொழில் தெய்வம் என்றும் சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். நட்சத்திர தம்பதிகளான கமல், சரிகாவின் மகளான ஸ்ருதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்களின் கனவுக்கன்னியாக உள்ள இவர் இசையிலும் வல்லவர்.
தமிழில் ஸ்ருதி..
7ம் அறிவில் அறிமுகமான, இந்த அழகி ' 3' ல் மூக்கில் விரல் வைக்க வைத்தார் தன் திறமையால்.
தெலுக்கில் ‘3'
கைவசம் தற்போது 3 தெலுங்கு படங்கள். இது தவிர்த்து தற்போது புதிதாக பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜோடி அல்லு அர்ஜுன்
இது குறித்து டுவிட்டர் வலைதளத்தில் , ‘ மற்றொரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளேன். இதில், அல்லு அர்ஜுனும் நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இதனை இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பற்காக நான் மிகுந்த ஆவலில் உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
இந்திப்படம்
சமீபத்தில் தான் அவர் இந்தி படங்களான ராமையா வஸ்தா வையா மற்றும் டி-டே ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
தெலுங்கில் பிசி
ரவி தேஜாவுடன் பலுப்பு , ராம் சரண் தேஜாவுடன் எவ்வடு மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். உடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார்.
2013... சோ லக்கி...
'
2013ம் ஆண்டு எனக்கு சிறந்த வருடமாக அமைந்துள்ளது. செய்யும் தொழில் தெய்வம்' என்று கூறியுள்ளார் ஸ்ருதி.
Post a Comment