அடேங்கப்பா... 27 கோடிக்கு மார்புகளை இன்சூரன்ஸ் செய்யும் ஹாலிவுட் நடிகை!

|

Jennifer Love Hewitt Wants Insure Her Breasts

லாஸ் ஏஞ்செலஸ்: ஹாலிவுட்டைச் சேர்ந்த கவர்ச்சி நடிகை ஜெனீபர் லவ் ஹெவிட், தனது மார்புகளை ரூ. 27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப் போகிறாராம்.

மிகப் பெரிய மார்புகளுடன் ஹாலிவுட்டில் வலம் வருபவர் ஜெனீபர். இப்போது இந்த முன்னழகை பெரும் தொகை கொடுத்துப் பாதுகாக்கப் போகிறாராம் ஜெனீபர்.

34 வயதாகும் ஜெனீபர் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஆமாம், எனது அழகிய மார்புகளை இன்சூரன்ஸ் செய்யப் போகிறேன். ரூ.27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யும் திட்டம் உள்ளது. சிலர் குறைந்த தொகைக்கு இன்சூரன்ஸ் கேட்டார்கள். ஆனால் எனது மார்புகள் அவ்வளவு குறைந்தவை அல்ல. எனவே ரூ. 27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்ய தீர்மானித்துள்ளேன். இதை விட குறைந்த தொகைக்கு எனது மார்புகளை என்னால் இன்சூர் செய்ய முடியாது என்றார் பெருமையுடன் தனது மார்புகளைப் பார்த்தபடி.

இதற்கு முன்பு ஜெனீபர் லோபஸ்தான் மிகப் பெரிய தொகைக்கு தனது மார்புகளை இன்சூர் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல டோலி பார்டான் என்ற இன்னொரு நடிகை தனது இரு மார்புகளையும் தலா 3 லட்சம் டாலர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வைத்துள்ளார்.

தனது சைஸுக்கேற்ற பிரா மற்றும் பாண்டீஸை ஜெனீபரே வடிவமைத்துக் கொள்கிறார் என்பது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.

 

Post a Comment