தெலுங்கு நடிகர் நர்லா தேஜா ரிஷிகேஷ் ஆற்றில் மூழ்கி பலி

|

Telugu Actor Drowned River

ரிஷிகேஷ்: ரிஷிகேஷ் சுற்றுலா சென்ற தெலுங்கு நடிகர் நர்லா தேஜா அங்கு ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த ‘முராரி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நர்லா தேஜா. இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் என்.ஸ்ரீதரின் மகன் நர்லா தேஜாவிற்னு தற்போது 17 வயதாகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள மிர்பிரி அகாடமியில் படித்து வந்த அவர், கடந்த 5-ந்தேதி ரிஷிகேசில் நடந்த சர்வதேச யோகா பயிற்சியில் பங்கேற்க 20 மாணவர்களுடன் சென்றனர்.

அப்போது தேஜா உள்பட 6 மாணவர்கள் அங்குள்ள ஆற்றில் இறங்கி நீந்தினார்கள். அப்போது திடீரென தேஜா ஆற்றில் மூழ்கினார். அவரை மற்ற மாணவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் நடிகர் நர்லாதேஜா மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி மற்ற மாணவர்கள் தேஜாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் எஸ்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Post a Comment