இந்தியில் புதிய படம்: ரஜினியைச் சந்தித்தார் ரசூல் பூக்குட்டி!

|

Rasool Pookkutty Meets Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்தார் ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரனுக்கு ஒலி வடிவமைத்தவர் ரசூல் பூக்குட்டிதான் என்பது நினைவிருக்கலாம்.

அடுத்து பாகிஸ்தானை களமாகக் கொண்டு ஒரு இந்திப் படம் இயக்குகிறார் ரசூல். ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில், அமிதாப் பச்சன் பாகிஸ்தான் பிரஜையாக நடிக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த ரசூல் பூக்குட்டி, சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

"சூப்பர் ஸ்டார் ரஜினியை சனிக்கிழமை மாலை ரசூல் பூக்குட்டி சந்தித்துப் பேசினார். இந்தியில் தான் இயக்கும் படம் குறித்து ரஜினியிடம் அவர் பேசினார். இன்று மும்பை வருகிறார். அமிதாப்பைச் சந்திக்கப் போகிறார்," என்று ரசூல் பூக்குட்டியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

ரஜினியையும் அமிதாப்பையும் மீண்டும் இந்தப் படத்தில் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறாரா ரசூல் பூக்குட்டி?

 

Post a Comment