சென்னை: மன்மத ராசா என்ற ஒற்றை பாட்டால் தமிழகத்தில் படு பிரபலமான சாயா சிங் தற்போது இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலின் அக்காவாக நடிக்கிறாராம்.
திருடா திருடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் சாயா சிங். அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அவர் மன்மத ராசா பாட்டுக்கு போட்ட ஆட்டம் இருக்கிறதே. அதை தமிழக மக்களால் இன்றும் மறக்க முடியாது. அப்படி ஒரு ஆட்டம் போட்டிருந்தார். பொண்ணு நல்லா வரும் என்று நினைத்தால் பாவம் ஏனோ வாய்ப்பின்றி தவிக்க வேண்டியதாகிவிட்டது.
பின்னர் சின்னத்திரைக்கு சென்ற சாயா சிங் அங்கு ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபன் என்ற படத்தின் மூலம் பெரியதிரைக்கு மீண்டும் வந்தார். வாலிபனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தோடு அவர் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
படத்தில் அவர் ஒன்றும் உதயநிதிக்கு இன்னொரு ஜோடியல்ல, அக்கா. சாயா சிங்கை இப்படி அதற்குள் அக்கா வேடத்திற்கு அனுப்பி விட்டார்களே...
Post a Comment