ஹைதராபாத்: பிரபுல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் பலியானார்.
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டூடியோவில், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பாட்ஷா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது.
இதுபோன்ற விழாக்களுக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்களை வரவழைப்பது ஜூனியர் என்டிஆர் ஸ்டைல்.
இந்த முறையும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலில் சிக்கி வாராங்கல் மாவட்டம், உர்சுகுட்டாவைச் சேர்நத ராஜூ என்ற ரசிகர் இறந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜூனியர் என்டிஆர், "என் சகோதரர்களில் ஒருவரை இழந்தது வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு அவரது இடத்தில் நான் இருந்து அனைத்தையும் செய்வேன். என் வார்த்தையைக் காப்பேன். இனி ஒருபோதும் இந்த மாதிரி நடக்கக் கூடாது என்பதில் சகோதரர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்," என்றார்.
இறந்த ரசிகர் குடும்பத்துக்கு பாட்ஷா படத் தயாரிப்பாளர் ரூ 5 லட்சம் நிதி வழங்கினார்.
Post a Comment