சந்தானத்தின் ஜோடியாகிறார் கீதா பஸ்ரா!

|

Geetha Basra Be Paired Up With Santthanam

தான் அடுத்து தயாரித்து நடிக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவுடன் ஜோடி போடுகிறார் காமெடியன் சந்தானம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை தயாரித்து, நடித்து வெற்றியை ருசி பார்த்த சந்தானம், அடுத்து ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா நடிக்கிறார்.

தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய 'மரியாதை ராமண்ணா' படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தைதான் சந்தானம் பி.வி.பி. நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, நடிக்கவும் செய்கிறார். இந்தியில் 'சன் ஆப் சர்தார்' என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் ஆனது நினைவிருக்கலாம்.

தமிழில் ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.

இதில் சந்தானத்துக்கு ஜோடியாக லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவழி நடிகையான கீதா பஸ்ரா அறிமுகமாகிறார். இவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் எடுத்த நடிகை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "சந்தானம் தமிழில் பிரபல காமெடியனாக இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது," என கீதா பஸ்ரா கூறியுள்ளார்.

லண்டனிலிருந்து விரைவில் சென்னை வரவிருக்கும் கீதா பஸ்ரா தங்க இப்போதே வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டாராம் சந்தானம்!

 

Post a Comment