பாலிவுட்டில் இளையராஜாவின் இசைக்கு ராஜபாட்டை அமைத்துத் தந்தவர் இயக்குநர் பால்கி.
அவரது சீனி கும், பா போன்ற படங்களில் இளையராஜா பின்னணி இசையில் பின்னி எடுத்தார். ஆனால் ராஜாவின் பழைய மெட்டுகள்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்தினார் பால்கி.
தனது அடுத்த புதிய படத்துக்கு மீண்டும் இளையராஜாவுடன் கை கோர்க்கிறார் பால்கி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மீண்டும் இளையராஜாவுடன் இணைவதை பெருமையாக நினைக்கிறேன். என்னுடைய முந்தைய இரு படங்களுக்கும் அவர்தான் இசை. என்னைப் பொறுத்தவரை இளையராஜாதான் இசை. இசைதான் இளையராஜா. அவர் என் படங்களுக்கு இசையமைக்க விரும்பி சம்மதித்தால், அதை என் மகிழ்ச்சியாக கருதுவேன்," என்றார்.
இந்தப் படத்துக்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் தென்னிந்திய நடிகர்கள் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment