எல்ரெட் குமாரிடமிருந்து என்னைக் காப்பாத்துங்க! - கவுதம் மேனன்

|

Gautham Menon Alleges Harassment Elred Kumar

சென்னை: எல்ரெட் குமாரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் - கவுதம் மேனன் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. கவுதம் மேனன் ரூ 20 கோடி வரை தனக்கு தர வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் எல்ரெட் குமார்.

இதற்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார் கவுதம் மேனன்.

எனது திறமை, நோக்கம் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. படம் செய்வதாக நான் அளித்த உறுதியை மீறவில்லை.

சொல்லப்போனால் எல்ரெட் நிறுவனத்துக்கு 4 படங்கள் இயக்கி தந்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் சிம்புவை வைத்து படம் இயக்கி தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால் சிம்பு நடிக்கவில்லை. இதையடுத்து ஜீவாவை வைத்து படம் உருவாக்குவது என்று இருவரும் புரிதல் ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

இப்படத்திற்கு பணியாற்றிய மூத்த கலைஞர் ஒருவர் மீதும் அந்நிறுவனத்துக்கு அதிருப்தி இருந்தது. ஆனால் அந்த கலைஞரால்தான் படத்துக்கு கூடுதல் விற்பனை மதிப்பு கிடைத்தது. அதையும் மேடையிலும் பட நிறுவன அதிபர் தெரிவித்தார். பின்னர் சிலரிடம் அதுபற்றி மாற்று கருத்து கூறி இருக்கிறார். தற்போது நான் தொல்லையில் சிக்கி இருக்கிறேன். அதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்," என்று, குறிப்பிட்டிருக்கிறார்.

 

Post a Comment