இறுதிக் கட்டத்தில் தலைவா... படப்பிடிப்புக்கு ஆஸ்திரேலியா செல்கிறார்கள்!

|

Thalaivaa Team Goes Australia   

தன் ரசிகர்களைத் தவிர, மற்றவர்களும்கூட தன்னை தலைவா என்றழைக்க என்ன வழி என்று ரூம் போட்டு யோசித்து, தன் படத்துக்கு தலைப்பு வைத்த விஜய் அன்ட் கோ, படத்தை முடிக்கும் வேலைகளில் படுபிஸியாக உள்ளது.

இப்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறார்கள்.

ஏ எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அமலா பாலுடன் விஜய் டூயட் பாடும் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்பட்டன.

பின்னர் மீண்டும் மும்பைக்கே திரும்பிய படக்குழு அங்கு வைத்து விஜய் - மும்பை நடிகை ராகினி நந்த்வானி நடிக்கும் காட்சிகளைப் படமாக்கினர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வரும் 15ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது படக்குழு. அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்புகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுகிறது.

 

Post a Comment