சமந்தா - சித்தார்த் நடித்த 'டும் டும் பீ பீ' படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த தெலுங்கு படம் ‘ஜாபர்தஸ்த்'. கடந்த மாதம் ஆந்திராவில் இப்படம் ரிலீசானது. தற்போது தமிழில் இதை ‘டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடவிருந்தது.
இதற்கிடையில் ‘ஜாபர்தஸ்த்' படத்தை எதிர்த்து பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், "பேண்ட் பாஜாபரத்' என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் ‘ஜாபர்தஸ்த்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை தமிழிலும் ‘டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர். எனவே இப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு ‘ஜாபர்தஸ்த்' படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடகூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
சமந்தாவும், சித்தார்த்தும் தீவிரமாகக் காதலித்து வருகின்றனர். அந்த காதலுக்கு அஸ்திவாரம் போட்டதே இந்த ஜபர்தஸ்த் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment