ராம்கோபார்ல வர்மாவின் ரோட், முசபிர், ஏக் கிலாடி ஏக் ஹசினா போன்ற ஹிந்தி படங்களில் கவர்ச்சி பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் கொய்னா மித்ரா.
மிகவும் கவர்ச்சியான உடலமைப்பை கொண்ட இவருக்கு எமனாக வந்து, அவருடைய அழகையே சீர்குலைத்துவிட்டது பிளாஸ்டிக் சர்ஜரி. கோயனாவின் முக அமைப்பிற்கு, அவருடைய மூக்கு சிறிது நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கூற, மூக்கை நீளமாக்க காஸ்மெடிக் சர்ஜரி மேற்கொண்டார் கொய்னா.
அறுவை சிகிச்சையினால் கொய்னாவின் முகத்தில் உள்ள எழும்புகள் வீங்க ஆரம்பித்தன. இதனால் அவருடைய முகம் பெரிதாகி, விகாரமாகிவிட்டது.
இதுகுறித்து நினைவு கூறும் கொய்னா "எனது முகம் வீங்க ஆரம்பித்தவுடன், நான் மருத்துவர்களிடம் சென்றேன். ஆனால் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கடவுளும், மருந்துகளும் தான் உன்னை காப்பாற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர். இதில் இருந்து மீண்டு தற்போது இந்த நிலைமைக்கு வந்ததற்கு எனது தன்னம்பிக்கை தான் காரணம். எனது முகம் விகாரமானவுடன் சிறிது காலம் வெளியே வராமல் மும்பையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தேன்.
அதன் பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு வெளியே வர ஆரம்பித்தேன். என்னை போன்ற ஒரு பிரபலமான சினிமா நட்சத்திரம் இந்த முகத்துடன் வெளியே வருவதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும் என்று சிலர் கூறினாலும், பலர் என்னை வெறுக்கவே செய்தனர். எனது நெருங்கிய நண்பர்கள் கூட என்னை விட்டு சென்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார் கொய்னா.
கொய்னாவின் முகம் மீண்டும் சீராக அவருக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. காஸ்மெடிக் அறுவை சிகிச்சை அவருடைய முகத்தை சீர்குலைத்தாலும், திரைப்பட வாழ்வை குலைக்கவில்லை. திரைப்பட வாய்ப்புகள் மீண்டும் வரத் தொடங்கின. ஆனால் அது எதுவும் சரிபடவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு, அமரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது நன்பர் மூலம் மைக்கேல் ஹெர்ஷல்ஸின் தீ ஸ்டோரி ஆப் நவோமி படவாய்ப்பு கிடைத்தது.
"என்னுடைய இந்த முக அமைப்பே இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு மிகவும் பொறுத்தமாக அமைந்தது" புன்னகையுடன் கூறுகிறார் கொய்னா.
Post a Comment