கமல் அட்வைஸ்.. இனி ஆண்ட்ரியா அழகுத் தமிழில் பேசுவார்!

|

ஆண்ட்ரியாவின் அழகைப் போல அவரின் குரலும் அழகுதான். அதனால்தான் நடிப்போடு பின்னணிப் பாடல் பாடுவதையும் கைவசம் வைத்துள்ளார்.

பிரபல நடிகைகளுக்கு பின்னணி பேசுவதும் ஆண்டிரியாதான். ஆனால் பொது இடங்களிலோ, மேடைகளிலோ அம்மணி பேசுவது ஆங்கிலத்தில் தானாம்.

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆடிய ஆண்ட்ரியா, படத்தின் வெற்றிவிழா மேடையில் ஆங்கிலத்திலேயே பேசினார். இதைப் பார்த்த கமல், தமிழில் பேசுமாறு அட்வைஸ் செய்தாராம்.

தமிழ் பேசத் தெரியாத பூஜா குமாரே தமிழில் நாலு வார்த்தை பேசுகிறார். தமிழ் நன்றாக பேசத் தெரிந்தும் ஏன் தயங்கவேண்டும் என்று கமல் கேட்கவே, மனம் மாறிய ஆண்ட்ரியா இனி தமிழில் மட்டுமே பேசுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

 

Post a Comment