ஹைதராபாத்: அதிக கவர்ச்சி காட்டி நடிப்பதாக நடிகைகள் அனுஷ்கா, ப்ரியாமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இருவருமே கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
அனுஷ்காவும் பிரியாமணியும் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கின்றனர் என்றும் அவர்கள் படங்களை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது என்றும் சமூக சேவகர் சுப்புடு என்பவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். இருவரும் ஆபாசமாக நடித்த படங்களை போலீசார் பார்த்து வருகின்றனர். எந்தெந்த படங்களில் ஆபாசமாக வருகிறார்கள் என்ற விவரங்களையும் காட்சிகளையும் சேகரிக்கிறார்கள். ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
அனுஷ்கா, ப்ரியா மணி இருவருக்கும் இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து அனுஷ்காவிடம் கேட்டபோது, "நான் ஆபாசமாக நடிப்பதாக வழக்கு போட்டிருப்பது பப்ளிசிட்டி ஸ்டன்ட். இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஏதோ ஒரு படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்ததை இப்படி பண்ணுவார்கள் என்று நினைக்கவில்லை. இது ஒரு வழக்கே அல்ல... என் மீது வழக்குப் போடுபவர்களை, நான் அடுத்து நடிக்கும் ‘ருத்ரம்மா' என்ற புராணப் படத்தைப் பார்க்கச் சொல்லுங்கள்," என்றார்.
பிரியாமணி கூறும்போது, "நான் ஆபாசமாக நடிக்கவில்லை. வழக்கு போட்டவர் குறிப்பிட்டுள்ள படத்தில் நான் சேலை உடுத்தி வருகிறேன். அரைகுறை ஆடை எதுவும் அணியவில்லை. புடவை கட்டி ஆடுவது ஆபாசமா?" என்றார் கோபத்துடன்.
Post a Comment