தீ விபத்தில் காயமடைந்த பழம்பெரு நடிகை சுகுமாரியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா

|

Cm Enquires Well Being With Sukumar Being Treated

சென்னை: தீ விபத்தால் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பழம்பெரும் நடிகை சுகுமாரியின், 74, உடல் நலம் குறித்து முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பழம்பெரும் திரைப்பட நடிகை சுகுமாரி. முதல்வர் ஜெயலலிதாவுடன், பல படங்களில் நடித்துள்ளார். இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள்.

சில நாட்களுக்கு முன், சுகுமாரி, தன், தி.நகர்., வீட்டில், விளக்கு ஏற்றும்போது, புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, குளோபல் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுகுமாரியை நேரில் பார்க்க, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மதியம், 1:40 மணிக்கு, பெரும்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுகுமாரி மற்றும் அவர் உறவினர்களிடம், நலம் விசாரித்தார்.

 

Post a Comment