சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி. பாலநமச்சிவாயனின் ரியல் எஸ்டேட் தொழிலை நடிகை மோனிகா துவங்கி வைத்தார்.
பயபுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பாலநமச்சிவாயன். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். அவர் ராமநாதபுர மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கியுள்ளார். துவக்க விழாவுக்கு நடிகை மோனிகா வந்திருந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய பாலநமச்சிவாயன் கூறுகையில்,
நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். ரஜினிக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்பேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவன். என் முன்னேற்றத்திற்கு எனது நண்பர்கள் தான் காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார்.
இதையடுத்து பேசிய மோனிகா, கவலைப் படாதீர்கள், நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள். நானும் ரஜினிகாந்த் ரசிகை தான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். முதல் ஆளாக நான் 5 மனை வாங்குகிறேன் என்றார்.
பரவாயில்லையே, ஆறுதல் தந்ததோடு நிற்காமல் அஞ்சு மனையையும் வாங்கிப் போட்டாரே.. இவர்தான் உண்மையான விசுவாசி!
Post a Comment