தமிழ்ப் படங்களுக்கு இந்த ஆண்டு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் முக்கிய விருதுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
60 வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளில் அதிக தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா, இந்த முறை முக்கியமற்ற பிரிவுகளில் மட்டுமே 5 விருதுகளைப் பெற்றுள்ளது.
கிடைத்துள்ள விருதுகள் விவரம்:
சிறந்த படம் - வழக்கு எண் 18/9 (இயக்குநர் பாலாஜி சக்திவேல்)
சிறந்த ஒப்பனை - ராஜா (வழக்கு எண் 18/9)
சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் - பூர்ணிமா ராமசாமி (பரதேசி)
சிறந்த நடனம் - பண்டிட் பிர்ஜி மஹராஜ் (விஸ்வரூபம்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - இளையராஜா (விஸ்வரூபம்)
Post a Comment