கவிஞர் வைரமுத்துவின் தந்தை காலமானார்: வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு

|

Lyricist Vairamuthu S Father Is No More

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர் நேற்று காலமானார். வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகபட்டியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர்(82). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறுநீரக பிரச்சனைக்கான சிகிச்சை பெற மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் போனது. இதையடுத்து சொந்த ஊரான வடுகபட்டிக்கு நேற்று அவர் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் பகல் 12.30 மணிக்கு காலமானார்.

இது குறித்து தகவல் அறிந்த வைரமுத்து தனது குடும்பத்தாருடன் வடுகபட்டி கிளம்பினார். ராமசாமித் தேவருக்கு வைரமுத்து, பாண்டியன் (காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்) என்ற 2 மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். ராமசாமித் தேவரின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 1 மணிக்கு வடுகபட்டியில் நடைபெறுகிறது.

 

Post a Comment