ஹாங்காங்கில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அருள்நிதி நடித்த மௌனகுரு படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி, இனியா ஆகியோர் நடித்த படம் மௌன குரு. 2011-ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் இப்படம் ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கிறது.
ஹாங்காங்கில் 37வது சர்வதேச திரைப்பட விழா வருகிற மார்ச் 17 முதல் ஏப்ரல் 2 வரை நடக்கிறது. இதில் உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த 10-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஜேக்கப் வாங்கிற்கு ‘மௌனகுரு' உள்ளிட்ட சில படங்கள் திரையிட்டு காட்டப்பட்டன.
இந்தப் படம் அவருக்குப் பிடித்துவிட்டதால், ஹாங்காங்கில் நடக்கும் விழாவில் மார்ச் 24 மற்றும் 30ம் தேதிகளில் திரையிட மௌன குருவை தேர்வு செய்துள்ளனர்.
Post a Comment