சென்னை: மங்காத்தா படத்தில் அஜீத் நரைமுடியோடு நடித்தது ஹிட்டானதால் அதே மாதிரி தங்கள் படங்களிலும் நடிக்குமாறு இயக்குனர்கள் அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனராம்.
மங்காத்தா படத்தில் அஜீத் குமார் டை அடிக்காமல் நரைத்த முடியுடனேயே நடித்திருந்தார். ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் கரு, கருவென்ற முடியுடன் வருகையில் அஜீத் இப்படி வெளுத்த தலையுடன் வருவதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்களோ என்று மங்காத்தா படக்குழுவினருக்கு ஒரு கலக்கம் இருந்தது.
ஆனால் அஜீத்தின் நரைத்த முடி கெட்டப் ஹிட்டாகிவிட்டது. நரைத்த முடியில் அஜீத் அம்சமாகத் தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அஜீத்தை வைத்து படம் எடுப்பவர்கள் தங்கள் படத்தில் ஒரு பாட்டுக்காவது நரைத்த முடியுடன் வருமாறு கோரிக்கை விடுக்கிறார்களாம்.
அவர் நரைத்த முடியுடன் வந்தால் படம் ஹிட் என்று நினைக்கிறார்களோ?
Post a Comment