சீனா போகிறது கோச்சடையான் குழு.. மே முதல் வாரம் இசை வெளியீடு!

|

Kochadaiyaan Crew Fly China

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக சீனாவுக்குப் புறப்படுகிறது படக் குழு.

ரஜினி - தீபிகா, சரத்குமார், ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள, மோஷன் கேப்சரிங் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிவரும் பிரமாண்ட படம் கோச்சடையான்.

படத்தின் எடிட் செய்யப்பட்ட காட்சிகளை சமீபத்தில் பார்த்த ரஜினி பெரிதும் பாராட்டியிருந்தார். கேஎஸ் ரவிக்குமாரும் நினைத்ததை விட 10 மடங்கு பிரமாண்டமாக வந்துள்ளது இந்தப் படம் என்றார்.

இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியை சீனாவில் வைத்து செய்யப் போகிறார்களாம்.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இயக்குநர் சௌந்தர்யா ரஜினி, "திங்கள் கிழமை கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷனுக்காக சீனா போகிறோம். 24-ம் தேதி படத்தின் டப்பிங் தொடங்குகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மே முதல் வாரம் ஆடியோ வெளியீடு இருக்கும் என்றும், ஜூலையில் படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.

 

Post a Comment