சென்னை: மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சு தயாரித்த மறந்தேன் மன்னித்தேன் படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
லட்சுமி மஞ்சு தெலுங்கில் தயாரித்த படம் குண்டெல்லோ கோடாரி. குமார் நாகேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் ஆதி, டாப்சி, சந்தீப் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் ஏற்கெனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகிவிட்டன.
இந்தப் படம் தமிழில் மறந்தேன் மன்னித்தேன் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ரஜினிக்காக அவரது வீட்டில் உள்ள திரையரங்கில் போட்டுக் காட்டினார் லட்சுமி மஞ்சு.
படம் பார்த்த சூப்பர் ஸ்டார், புதுமையான கதை, சிறப்பான இசை, ரசித்துப் பார்த்தேன் என பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், "ரஜினி அங்கிளுக்காக படத்தை போட்டுக் காட்டினேன். எனது நடிப்பைப் பாராட்டிய ரஜினி அங்கிள், படம் புதுமையாக இருந்ததாகவும், யாரும் தொடாத கதையை தேர்வு செய்திருப்பதாகவும் கூறினார். இதைவிட ஒரு பெரிய ஆசீர்வாதம் வேறெதும் இல்லை. என் தந்தை மோகன் பாபுவுக்கும் போன் செய்து படம் குறித்துப் பாராட்டிப் பேசினார் ரஜினி அங்கிள். தெலுங்கில் இந்தப் படம் பெரிய ஹிட்... தமிழில் ரஜினி ஆசி கிடைத்துவிட்டது. இது என் படத்துக்கு கிடைத்த விருது மாதிரி," என்றார்.
Post a Comment