சூர்யா நடித்து முன்பு வசூலைக் குவித்த சிங்கம் படத்தை சன் டிவி வாங்கி வெளியிட்டது நினைவிருக்கலாம்.
சிங்கம் படத்தின் டிவி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் சன்னுக்கு விற்றிருந்தனர்.
இப்போது சிங்கம் 2 படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படத்தையும் சன்டிவிக்குதான் விற்றுள்ளனர் என்பது ஒரு பக்கம்...
இன்னொரு பக்கம், இந்தப் படத்தின் தலைப்பு சட்டப்படி சன் டிவிக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடியதால், அந்தத் தலைப்பை பெறுவதற்காக மட்டும் ரூ 3 கோடிக்கு மேல் தரவேண்டியதாகிவிட்டதாம்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி என்பதை படத்தின் க்ளைமாக்ஸிலேயே சொல்லிவிட்டிருந்தார் இயக்குநர். எனவே படத்தை சன்னுக்கு விற்றபோதே தலைப்புக்கான உரிமையை எழுதி வாங்காமல் விட்டதன் விளைவு, கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு தலைப்புக்கே போய்விட்டதே என ஆதங்கத்தில் உள்ளார்களாம் தயாரிப்புத் தரப்பில்!
Post a Comment