நான் ரஜினி, கமல் மாதிரி வருவேன்- உதயகிரண் பேட்டி

|

I Will Become Like Rajini Or Kamal Says Actor Udaykiran

சென்னை: இயக்குனர் கே.பாலசந்தரின் பொய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் உதய கிரன், நான் ரஜினி கமல் மாதிரி வருவேன் என பேட்டி அளித்துள்ளார்.

தற்போது மீண்டும் தனது ராசியை ஒ-ரு அதிரடி ஆக்ஷன் படம் மூலம் பறிச்சித்து பார்க்க உள்ளார். இந்த படத்தின் மீது உதய கிரண் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.

இதுபற்றி உதய கிரண் கூறும் போது, " ரஜினி சார், கமல் சார், பிரகாஷ் ராஜ் சார் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் பாலசந்தர் சார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானதில் எனக்கு மிகவும் பெருமையா இருக்கு. பொய் படம் பெரிய அளவில் வெற்றி பெறாதது துரதிஷ்டமானது. ஆனால் இந்த படத்தின் கதை எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்து இருக்கு. நிச்சயமா நான் ரஜினி, கமல் மாதிரி வருவேன். இந்த கதையின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் நான் இதை கூறுகிறேன்.

எனக்கு இருக்கும் சாக்லெட் பாய் இமேஜை உடைக்க நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். காரணம் இது ஒரு ஆக்ஷன் படம். இதற்காக என்னை உருமாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. கதாநாயகியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பெரிய பட்ஜெட் படத்தை ப்லையிங் கலர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு வினோத் குமார் இசையமைக்க உள்ளார். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு விறுவிறுப்பான படத்தை தருவேன் என்று இயக்குநர் சுதாகர் என்னிடம் உறுதி அளித்திருக்கிறார். படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

 

Post a Comment