நல்ல வாய்ப்பு கிடைத்தால் எந்த அளவு கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என்கிறார் நடிகை வர்ஷா.
ஜெயம் ரவி நடிப்பில், எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான பேராண்மையில் 5 நாயகிகளுள் ஒருவராக நடித்தவர் வர்ஷா. முழுப்பெயர் வர்ஷா அஸ்வதி.
அடுத்து சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவையில் இன்ஸ்பெக்டராக வந்தார்.
இப்போது எம்ஏ அகமது இயக்கத்தில் என்றென்றும் புன்னகை படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அந்தப் படத்தில் இவருக்கு ஜோடி வினய்.
பனிவிழும் மலர்வனம் படத்தில் ஆக்ஷன் நாயகியாக நடிக்கிறார். இதில் அவர் புலியுடன் சண்டை போடுகிறாராம்.
பிபிஎம் பட்டதாரியான வர்ஷா, பிறந்தது கொல்கத்தாவாக இருந்தாலும் வளர்ந்தது படித்ததெல்லாம் தூத்துக்குடி. தமிழ், இந்தி, வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் பிளந்து கட்டும் வர்ஷாவுக்கு, மலையாளமும் ஓரளவு வருமாம்.
தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடிப்பது பெரிய விஷயம்... அதை விட பெரிய விஷயம் சினிமாவில் நிலைப்பது. நான் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளேன். பெயர் சொன்னால் தெரியுமளவுக்கு வேடங்கள். இப்போது என்றென்றும் புன்னகை, பனி விழும் மலர்வனம் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். நன்றாக நடனம் தெரியும், ரஜினி சார், கமல் சார் படங்களைத்தான் நினைவு தெரிந்த நாள் முதல் விரும்பிப் பார்த்து வருகிறேன். இவர்களின் படங்களில் ஏதாவது ஒரு ரோலில் நடிக்க ஆசை.
கவர்ச்சியாக நடிக்க தயக்கமில்லை. காட்சிக்கு அவசியம், கதைக்கு முக்கியம் என்றால் கவர்ச்சியின் எல்லைகளை உடைக்கத் தயார். அதற்காக ஆபாசமாக நடிப்பேன் என்று அர்த்தமல்ல," என்றார்.
Post a Comment