கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்த அஞ்சலி... படப்பிடிப்பு நிறுத்தம்

|

Anjali Eletrocuted Shooting Spot

சென்னை: ஊர் சுற்றிப் புராணம் படத்தில் நடித்து வரும் அஞ்சலி படப்பிடிப்பில் கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்தானது.

டைரக்டர் மு.களஞ்சியம் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்யும் புதிய படம் ஊர் சுற்றி புராணம். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள தனியார் சத்திரத்தில் நடைப் பெற்று வருகிறது.

படப்பிடிப்புக்காக ஓட்டல் செட் போடப்பட்டிருந்தது. நேற்று ( சனிக்கிழமை) களஞ்சியம் மற்றும் அஞ்சலி சம்மந்தப் பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. வாசற் படிக்கட்டில் இருந்து அஞ்சலி வீட்டின் உள்ளே வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அஞ்சலி செருப்பு அணியாமல் உள்ளே நடத்து வந்தார்.

வீட்டின் உள்ளே நடந்து வந்த அஞ்சலி தற்செயலாக கீழே இருந்த வயர் மீது கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசியெறியப்பட்டு அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அஞ்சலியை திருப்போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஞ்சலிக்கு சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் வழக்கம் போல படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு திரும்பினார். ஆனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படவே அஞ்சலி சென்னை திரும்பினார்.

இந்த விபத்து குறித்து பேசிய இயக்குனர் மு.களஞ்சியம், மின் ஒயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது நடிகை அஞ்சலி கால் வைத்து விட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு மூர்ச்சையானார். மருத்துவ சிகிச்சைக்குபின் தற்போது நலமோடு இருக்கிறார். திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவித்தார்.

 

Post a Comment