செல்லம்.... இந்த வார்த்தையை கேட்டாலே சட்டென்று நினைவுக்கு வருவது பிரகாஷ்ராஜ்தான்.
என்னதான் வில்லனாக இருந்தாலும் பேசும் வார்த்தைகள்.... நடிப்பு என பிரகாஷ்ராஜ் தனி ரசிகர் வட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் பிரபலமான பிரகாஷ்ராஜ் தற்போது சின்னத்திரையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 தொகுத்து வழங்குகிறார்.
சின்னத்திரை ஒன்றும் அவருக்கு புதிதல்ல... ஏற்கனவே பாலச்சந்தரின் ‘கையளவு மனசு' தொடர் மூலம் ஏற்கனவே இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது பிரபலமான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியை எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் வில்லனாக இருந்து அந்த பணியை மூட்டை கட்டிவிட்டு கோட் சூட் போட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஓபனிங் கொடுக்க முடியும் என்று இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.
முதல்நாள் முதல் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரகாஷ்ராஜ் இருவர் படத்தின் கவிதையோடு தொடங்கினார். உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்... கவிதையை முடித்த உடனே இதை நான் இங்கே சொன்னேன் என்பதற்கான காரணத்தையும் சொன்னார். தான் பேசும் தமிழ் மீது இயக்குநர் மணி ரத்னத்திற்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இதனால் இருவர் படத்தில் தன்னை டப்பிங் பேச அனுமதிக்க வில்லை. அந்த கோபத்தில் நன்றாக தமிழ் பேசக் கற்றுக்கொண்டு டப்பிங் பேசினேன். அதுதான் தன்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று கூறினார்.
இதுவரை 4 எபிசோடுகள் முடிந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள். அதிலும் வால்பாறை தலைமை ஆசிரியர் ஒருவர் பங்கேற்று விளையாடிய எபிசோட் சுவாரஸ்யமாக இருந்தது.
இது கேள்வி பதில் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பற்றி தனியாக ஒளிப்பரப்பும் கிளிப்பிங்ஸ் சுவாரஸ்யமானது.
நிகழ்ச்சியின் இடையே அவர்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார். ஓஷோவின் தத்துவம்... வைரமுத்துவின் கவிதைகள் என ஒவ்வொன்றும் அனைவருக்கும் தேவையான தகவல்களாகவே இருக்கிறது.
இரண்டாவது எபிசோடில் பங்கேற்று மூன்றாவது எபிசோட் வரை அழகாக விளையாடி 12லட்சத்து ஐம்பதினாயிரம் பெற்றுச் சென்றார். அவருக்குப் பின்னர் வந்த பிசியோதெரபிஸ்ட், ஒரு டாக்டராக மட்டுமல்லாது விளையாட்டு வீரராகவும், இருந்தார். அவரைப் பற்றி பெற்றோர்களுக்கே தெரியாத தகவல்களை வெளியே கொண்டு வந்தார்.
நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சி ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த இடைவெளிகளை குறைத்தார்.
விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் ஓரளவிற்கு எளிமையானவைதான். ஆனால் இந்த நிகழ்ச்சியின் பகிரப்படும் தகவல்கள் நேயர்களுக்கு பயனுள்ளவை.
நீங்களும் வெல்லாம் ஒரு கோடியின் முதல் சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கினார். சூர்யாவை விட பிரகாஷ் ராஜ் ஸ்டைல் சூப்பர் என்கின்றனர் நேயர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாருமே பிரகாஷ்ராஜ் நடிப்பை பற்றி ஓவராக புகழவில்லை என்பதுதான் சிறப்பம்சம்.
Post a Comment