தனது அன்னக்கொடியும் கொடி வீரனும் படத் தலைப்பு மிக நீளமாக இருப்பதாகக் கருதிய இயக்குநர் பாரதிராஜா, இப்போது அதை வெறும் அன்னக்கொடி என்று சுருக்கியுள்ளார்.
பாரதிராஜாவின் தயாரிப்பு இயக்கத்தில் நீண்ட காலம் உருவாகி வந்த படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் வீரப்ப அய்யனார் கோயிலில் கிடாவெட்டி, பிரமாண்ட பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், பல காரணங்களால் தாமதமாகிவந்தது.
கார்த்திகா, லட்சுமண் நாராயன், மனோஜ்பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
பி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு சூட்டப்பட்ட பெயர் நீளமாக இருப்பதாக முதலில் சிலர் கருத்து தெரிவித்தனர். பின்னர் ஜோதிட ரீதியாக இது பாரதிராஜாவுக்கு வெற்றியைத் தராது என யாரோ போட்டுக் கொடுக்க, அதில் கொஞ்சம் நம்பிக்கை கொண்ட பாரதிராஜா, தலைப்பிலிருந்த கொடிவீரனை வெட்டிவிட்டார்.
அன்னக்கொடி என்ற தலைப்பில் படம் வரவிருக்கிறது.
Post a Comment