சென்னை: ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் தான் ஹைலைட்டாக இருக்கும் என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார்.
நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ஜில்லா. படம் பற்றி நேசன் கூறுகையில், ஒரே படத்தில் இரண்டு சூப்பர்ஸ்டார்களுடன் பணிபுரிவது சவாலான விஷயம். என் வேலையில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நடிகர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அவர்களை திரையில் நான் எப்படி காண்பிக்கிறேன் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
விஜய்-மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவில் நடக்கும். எல்லாம் நன்றாகப் போனால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று நேசன் தெரிவித்தார்.
Post a Comment