கோயில் அருகே நடிகை பார்வதி மெல்டனின் ஆபாச போஸ்டர் ஒட்டப்பட்டதைக் கண்டித்து, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகை பார்வதி மெல்டன். மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் முன்னணி நடிகை இவர்.
பிஸினஸ்மேன் படத்தின் தமிழ் டப்பிங்கில் இவரைப் பார்த்திருக்கலாம்.
இப்போது தெலுங்கில் தயாராகும் ‘யமஹோயமா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் ஹைதராபாத் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. எம்மிகனூர் பகுதியில் உள்ள பிரபல கோவில் அருகிலும் ஓட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் பார்வதி மெல்டன் அரைகுறை ஆடையில் மகா கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் ஆபாச போஸ் கொடுத்த பார்வதி மெல்டன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி ராஜேந்திரபிரசாத் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
90 சதவீத நிர்வாண கோலத்தில் பார்வதி மெல்டன் தோன்றுவதை போஸ்டராக அடித்து, அதுவும் கோவில் அருகில் ஒட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.
இந்த புகார் தொடர்பாக பார்வதி மெல்டனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஏற்கெனவே ஆபாசமாக தோன்றியதாக நடிகைகள் அனுஷ்கா, ப்ரியாமணி மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment