நடிகை ஆன்ட்ரியாவை தீவிரமாகக் காதலிப்பதாக இயக்குநர் ஃபாஸில் மகனும் பிரபல மலையாள நடிகருமான பாஹாத் ஃபாஸில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகை ஆன்ட்ரியாவின் காதல்கள் என தனியாக கட்டுரை எழும் அளவுக்கு பலருடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இசையமைப்பாளர் அனிருத்தும் அவரும் லிப் டு லிப் முத்தம் கொடுத்துக் கொண்ட படம் அண்மையில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ஆன்ட்ரியா காதலிப்பதாகவலும் இருவரும் நெருங்கிப் பழகி வருவதாகவும் பிரபல மலையாள நடிகர் பாஹாத் ஃபாஸில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இவர் பிரபல தமிழ் - மலையாள இயக்குநர் ஃபாஸிலின் மகன். மலையாளத்தில் ஹாட்டஸ்ட் ஹீரோவாகப் பார்க்கப்படுகிறார்.
இவரும் ஆன்ட்ரியாவும் அன்னயும் ரசூலும் என்ற படத்தில் மிக நெருக்கமாக நடித்திருந்தனர்.
சமீபத்தில் ஒரு மலையாளப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நானும் ஆன்ட்ரியாவும் டேட்டிங் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக பழகி வருகிறோம். அவரை நான் தீவிரமாக காதலிக்கிறேன். அன்னயும் ரசூலும் படத்தில் நடிக்கும் போதே இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம்," என்றார்.
ஆனால் இதுகுறித்து ஆன்ட்ரியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment