சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ், எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ராஜேஷின் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளார்.
ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரிக்க உள்ள இத்திரைப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் தமிழில் நேரடியாக நடிக்க உள்ளார். ஸ்டுடியோ கிரின் தயாரிப்பில் கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற திரைப்படத்தை ராஜேஷ் தற்போது இயக்கி கொண்டிருக்கிறார்.
இத்திரைப்படம் முடிந்த பின்னர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள திரைபடத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய படம் பற்றிய செய்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment