லண்டன்: பாடகியும், நடிகையுமான செலீனா கோமஸ், தான் புதிய பாய் பிரண்ட் யாரையும் இப்போதைக்குப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஜஸ்டின் பீபரிடமிருந்து சமீபத்தில்தான் பிரிந்தார் செலீனா. இதைத்தொடர்ந்து அவர் புதிய ஆணைத் தேட ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துள்ளார் செலீனா.
கடந்த ஜனவரி மாதம்தான் செலீனாவும், பீபரும் பிரிந்தனர். தற்போது தனிமையாகாத்தான் இருக்கிறாராம் செலீனா. ஆனாலும் தான் புதிய ஆளைத் தேடவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
20 வயதேயாகும் செலீனா இதுகுறித்துக் கூறுகையில், நான் பெரிய ரொமான்ஸ்காரிதான். இல்லை என்று சொல்லவில்லை. திறந்த மனதுடன்தான் இருக்கிறேன். அதையும் மறுக்கவில்லை. ஆனால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதையும் மறந்து விடக் கூடாதில்லையா... எனவே நான் அவசரப்படவில்லை. புதிய பாய் பிரண்ட் யாரையும் பார்க்கவில்லை என்றார் செலீனா.
Post a Comment