சினிமா நட்சத்திரங்கள் நினைத்த நேரத்தில் சென்று திருப்பதி ஏழுமலையான வழிபட முடிகிறது. எந்த வரிசையிலும் காத்திருக்கத் தேவையில்லை. நேராக காரில் வந்து கோயிலுக்கு முன் இறங்கினால் போதும்... அங்குள்ள குருக்களில் ஒருவர் ஓடோடி வந்து அவர்களை வரவேற்று நேராக மூலஸ்தானத்துக்கே அழைத்துப் போய் அரை மணி நேரம் அமர வைத்து லட்டு, பட்டு கொடுத்து அனுப்பி வைக்கிறார். ஜருகண்டி பிஸினஸே கிடையாது.
குறிப்பாக நடிகைகள். இப்போதெல்லாம் தினசரி நடிகைகள் திருப்பதி மலைக்குப் போய் சாமி தரிசனம் செய்கிறார்கள். பொதுமக்களும் போகிறார்கள். ஆனால் அவர்கள் 12 மணி நேரம் அங்கு பூட்டப்பட்ட அறைகளில் காத்திருக்க வேண்டும்.
திருமலையில் நேற்றைய ஸ்பெஷல் தமன்னா வருகைதான். அம்மணி நேற்று அடக்க ஒடுக்கமாக சுடிதாரில் வந்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன் அவர் தொப்புள் தெரிய பேன்ட் சட்டை போட்டு வந்ததால், பக்த கோடிகளின் கவனம் சிதைந்துவிட்டதாம். எனவே சிலர் கண்டனம் தெரிவித்து கோஷம் கூட போட்டார்கள்.
எனவே யார் கவனமும் கலையக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் உடம்பை முழுசாக மறைத்து வந்திருந்தார் தமன்னா.
அவர் வந்த தகவல் அறிந்ததும் பக்தர்களும், ரசிகர்களும் சூழ்ந்தார்கள்.
வழக்கம் போல மேல்சட்டை கூட அணியாத ஒரு பூசாரி ஓடி வந்தார். அவருடன் நேராக கோவிலுக்குள் சென்ற தமன்னா, பயக்தியுடன் சாமி கும்பிட்டனர். அரைமணி நேரத்துக்கும் அதிகமாக அவர் சாமியைக் கும்பிட்டார்.
ராஜபக்சேவுக்கு கொடுத்தது போலவே லட்டு மற்றும் பட்டுத் துணி கொடுத்தனர் தமன்னாவுக்கு. கோவிலுக்கு வெளியே அவருக்காக காத்திருந்த ரசிகர்கள் மொய்க்க ஆரம்பிக்க, சிரித்தபடியே பை சொல்லிவிட்டு காரில் ஏறிப் பறந்தார் தமன்னா!
Post a Comment