சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளது.
இதன் தெலுங்கு உரிமையை லட்சுமி கணபதி பிலிம்ஸ் பெற்றுள்ளது. தெலுங்கில் விக்ரம சிம்ஹா என்ற பெயரில் வெளியாகிறது இந்தப் படம்.
இந்தியாவின் முதல் 3 டி, மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையானை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். சூப்பர் ஸ்டாருடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா ஆகியோர் நடித்துள்ளனர்.
கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்க மேற்பார்வை செய்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.
பாடல்களை வரும் மே மாதம் சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படம் வரும் ஜூலையில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பான் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.
Post a Comment