சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த நீர்யானைக்கு நடிகை த்ரிஷா பெயரைச் சூட்டியுள்ளார் பூங்காவின் பொறுப்பாளர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. பூலோகம், என்றென்றும் காதல், ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஒன்று சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இந்தக் குட்டிக்கு அந்தப் பூங்காவின் அதிகாரி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சூட்டியுள்ளார்.
இந்த செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்த த்ரிஷா, தனது ட்விட்டரில், "நான் இப்போது வெளிநாட்டில் உள்ளேன். சென்னை வந்ததும் த்ரிஷா aka குட்டி நீர்யானையைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மிருக வதைக்கு எதிரான PETA (People for Ethical Treatment of Animals) அமைப்பில் உறுப்பினராக உள்ளார் த்ரிஷா. வழியில் எங்கே தெருநாய் தென்பட்டாலும் அதை எடுத்துப் போய் வளர்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
த்ரிஷாவின் இந்த பண்பு காரணமாக அவர் பெயரை நீர்யானைக் குட்டிக்கு வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது!
Post a Comment